குன்னூர் பர்லியார் பகுதியில் காட்டு யானைகள் தூங்கி கொண்டிருந்த தம்பதியின் காலைப்பிடித்து வெளியே இழுத்தும், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டதால் உள்ளே சென்று தாக்கியதாலும் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைபாதையில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால் காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளன. குன்னூர் மலைபாதையில் 7 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. குன்னூர் பர்லியார் பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களிலேயே அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பர்லியார் குடியிருப்பில் உலா வருகின்றது.
இந்நிலையில் பர்லியார் பகுதிக்கு வந்த ஒற்றையானை அங்கு பழக்கடை வைத்துள்ள அந்தோனி (50) என்பவரை துரத்தியது இதில் கழிவறைக்குள சென்று ஒழிந்த அந்தோனியை உள்ளேயே சென்று அவரை தாக்கியது உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?
மேலும் அதிகாலை பர்லியார் பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த டேவிட், ஸ்ரீஜா தம்பதியினர் வீட்டின் கதவை உடைத்து அவரின் காலை பிடித்து வெளியே இழுத்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உல்புறம் ஒளிந்து கொண்டனர். இதனால் நொடி பொழுதில் உயிர் தப்பினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் குன்னூர் வன சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் 8 குழுக்களாக காட்டுயானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!