எலான் மஸ்க்கோட டெஸ்லா நிறுவனம் இப்போ பெரிய சிக்கலில் மாட்டியிருக்கு! அமெரிக்காவின் புளோரிடா நீதிமன்றம், டெஸ்லா மேல ஒரு மாபெரும் அபராதத்தை விதிச்சு தீர்ப்பு கொடுத்திருக்கு. 2019-ல நடந்த ஒரு கொடூர விபத்து தான் இந்த விவகாரத்தோட ஆரம்பம். என்ன நடந்துச்சு? டெஸ்லாவோட ஆட்டோபைலட் அமைப்பு இதுல எப்படி சிக்கியிருக்கு?
2019-ல புளோரிடாவின் கீ லார்கோவில், ஜார்ஜ் மெக்கீனு ஒரு நபர் தன்னோட டெஸ்லா மாடல் எஸ் காரை ஆட்டோபைலட் மோடுல ஓட்டிட்டு இருந்தாரு. இது டெஸ்லாவோட தானியங்கி ஓட்டுநர் அமைப்பு, காரே தானா ஓட்டும் மாதிரி இருக்கும். அப்போ, ஜார்ஜோட மொபைல் போன் கீழ விழுந்துடுச்சு.
கார் ஆட்டோபைலட்ல இருக்குன்னு நம்பி, அவர் குனிஞ்சு போனை எடுக்க முயற்சி பண்ணாரு. ஆனா, அந்த நேரத்துல கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு சாலையோரத்துல நின்னு இருந்த செவ்ரோலே டஹோ காரு மேல மோதிடுச்சு. அந்த காருக்கு பக்கத்துல நின்னு இருந்த 22 வயசு நைபெல் பெனாவிடஸ் லியோன் உயிரிழந்தாங்க. அவங்க காதலர் டில்லன் அங்குலோ படுகாயமடைந்தாரு.
இதையும் படிங்க: இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரும்!! ட்ரம்ப் வார்னிங்கை மீறுவாரா எலான்?
இந்த விபத்துக்கு பிறகு, பாதிக்கப்பட்டவங்க குடும்பம் நீதிமன்றத்தை நாடியது. மூணு வார விசாரணைக்கு பிறகு, புளோரிடா நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கு. மொத்தம் 329 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,700 கோடி) இழப்பீடு கொடுக்கணும்னு உத்தரவு. இதுல, டெஸ்லா 33% பொறுப்பு ஏத்துக்கணும்னு சொல்லி, 242 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,996 கோடி) அபராதம் விதிச்சிருக்கு. மீதி தொகையை ஓட்டுநர் ஜார்ஜ் மெக்கீ தரணும். ஆனா, டெஸ்லா இந்த தீர்ப்பை ஏத்துக்காம மேல்முறையீடு செய்யப் போறதா அறிவிச்சிருக்கு.

இந்த விபத்துக்கு டெஸ்லாவோட ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணம்னு நீதிமன்றம் கண்டுபிடிச்சிருக்கு. ஜார்ஜ், "நான் ஆட்டோபைலட்டை நம்பினேன், அது என்னை காப்பாத்தும்னு நினைச்சேன்"னு கோர்ட்டுல சொல்லியிருக்காரு. ஆனா, ஆட்டோபைலட் சாலையோரத்துல உள்ள தடைகளை கண்டுபிடிக்க முடியாம, எச்சரிக்கை செய்யாம போயிடுச்சு. வாதாடின வக்கீல் ப்ரெட் ஷ்ரைபர், "டெஸ்லா ஆட்டோபைலட்டோட திறனை பெருசா காட்டி, ஓட்டுநர்களை திசைதிருப்பி வச்சிருக்கு"னு குற்றம்சாட்டியிருக்காரு. எலான் மஸ்க் 2016-ல, "ஆட்டோபைலட் எதையும் கண்டுபிடிக்கும்னு" பெருமையா பேசியதையும் கோர்ட்டுல எடுத்து காமிச்சிருக்காங்க.
டெஸ்லா பக்கம் என்ன சொல்றாங்க? "இந்த விபத்துக்கு ஓட்டுநரோட தவறுதான் காரணம். ஆட்டோபைலட் முழு தானியங்கி இல்லை, ஓட்டுநர் எப்பவும் கவனமா இருக்கணும்னு நாங்க எச்சரிச்சிருக்கோம்"னு வாதிடுது. ஆனா, நீதிமன்றம் இதை முழுசா ஏத்துக்கலை. இந்த தீர்ப்பு, டெஸ்லாவுக்கு பெரிய பின்னடைவு. காரணம், இது ஆட்டோபைலட் தொடர்பான முதல் மரண வழக்கு தீர்ப்பு. இனி இதே மாதிரி வழக்குகள் வர வாய்ப்பு இருக்கு.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு உறுதி! முற்றும் மோதல்.. தனிக்கட்சி துவக்கினார் எலான் மஸ்க்..