சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. 144 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்த நிலையில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையின் நிரூபிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்டு சட்டமன்றத்தில் ஒரு தரப்பு அரசுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு அரசுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளது. 25 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இபிஎஸ் தரப்பில் 22 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்துள்ளனர். தனக்கு ஆதரவாக வாக்களிக்க இருக்கும் எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் நேற்று சந்தித்தார். இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.

எம்எல்ஏக்கள் துரோகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடும் நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதான் தூய்மையா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!
எல்லா இயக்கங்களுக்கும் சோதனைவரும், பிரிவு வரும். ஆனால், எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்கு சென்றது இல்லை என்று தெரிவித்தார். ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறார் தவெக விஜய் என்றும் இது தவறான முன்னுதாரணம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செங்குத்தாக பிளவுபட்ட அதிமுக..! பரம எதிரி திமுகவுடன் சேர "வற்புறுத்திய EPS"..! எகிறும் குற்றச்சாட்டுகள்..!