அதிமுகவின் மூத்த பெண் தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக அறியப்படுபவர் பா. வளர்மதி. இளம் வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்ட வளர்மதி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். கட்சியின் பேச்சாளராகவும், பின்னர் மகளிரணி செயலராகவும் பொறுப்பேற்று, பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தியவர் என்ற பெயரைப் பெற்றார்.
அவரது அரசியல் பயணம் 1980களின் தொடக்கத்தில் தொடங்கியது. 1984ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2001ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ச்சியாகப் பங்களித்தார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுகளில் இரு முறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். முதலில் 2001 முதல் 2004 வரை சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து உணவுத் திட்டத் துறை அமைச்சராகவும், பின்னர் 2004 முதல் 2006 வரை கிராமப்புறத் தொழில்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2011ஆம் ஆண்டு மீண்டும் சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, 2016 வரை தொடர்ந்தார். 2021 ஆம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: இன்னும் அவர் கெட்ட வார்த்தைல தான் திட்டல..! " பால்டாயில் பழனிச்சாமி"..! கிண்டலடித்த உதயநிதி..!!
அவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் நடத்தினார். தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சி அமைந்த உடன் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து திமுகவின் குறைகளை எடுத்துரைத்தார். அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றினால் திமுகவிற்கு என்ன கஷ்டம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அதிகாரிகளை நம்பியே திமுக இருப்பதால் அவர்களை மாற்றிய உடன் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!