அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். செல்லும் இடமெல்லாம் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் தொடர்பாகவும், திமுக ஆட்சி மற்றும் ஆட்சியாளர்களின் குறைபாடுகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறி வருகிறார். திமுக மீதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு மற்றும் முதலமைச்சர் மீதான விமர்சனம் பேச பொருளாக மாறியது. இந்த நிலையில், அப்பா, அம்மா என்ற பெயரை மாற்றி விடாதீர்கள் என்ற எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு அமைச்சர் ஏ.வ. வேலு பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நன்றியுணர்வு மிக்கவர் என்றும் ஆனால் ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் அமைச்சர் வேலு விமர்சித்தார்.

தன்னை போலவே அனைவரையும் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாக விமர்சனம் செய்தார். மேலும், நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது என அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்று கூட சொல்ல தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க... இபிஎஸுக்கு டெல்லி கொடுத்த புது அசைன்மெண்ட்...!
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்துப் பேச வேண்டும் எனவும் பதிலடி கொடுத்தார். பாக்கெட்டில் எம்ஜிஆர் புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள் என எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் எ.வ. வேலு விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: சுற்றுப்பயணத்திற்கு தடை போட்ட காவல்துறை... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!