தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்தது. மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்துள்ளார். இந்த முறையும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையானது சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடந்து முடிந்தது. அதிமுக பாஜக கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: உங்க அரசியல் வாழ்க்கைக்கு நீங்களே முடிவுரை எழுதுறிங்க EPS… எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!

இந்த நிலையில், பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பியூஷ் கோயல், ஊழல் மிக்க திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கை தெரிவித்தார். அருமை நண்பர் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்றும் தெரிவித்தார். 2026 இல் என்டிய கூட்டணி நிச்சயம் அமையும் என்றும் கூறினார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் ஊழல் மிக்க திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றும் சூளுரைத்தார்.
தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட இடைவேளைக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் தமிழக அரசியல் நிலவரங்களை பியூஷ் கோயலிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு காத்திருக்கு… ஆனா SUSPENS… இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்…!