ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் திருவுருவ சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு..க ஸ்டாலின் அவரது சிலையை திறந்து வைப்பது பெருமையும், வீரமும் அடைவதாக பெருமிதம். பொல்லான் சிலையை திறந்து வைத்து அருந்ததியர் மக்களுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சருக்கு அருந்ததிய சமுதாய மக்கள் நன்றி தெரிவிப்பதாகவும் மீண்டும் 2026 திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்தார்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் முழு திருவுருவசிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், தொடர்ந்து மாவீரன் பொல்லான் வாரிசு தாரர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார், அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் சிறப்பறையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்., ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் திருவுருவ சிலையை திறந்து வைப்பதில் நான் மிகுந்த பெருமையும், வீரமடைகிறேன். எழுச்சி அடைகிறேன். நம் தமிழ் மண் ஈன்றெடுத்திருக்க கூடிய பூலித்தேவன்,தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், மாவீரன் பொல்லான் என அத்தனை பேரும் நம்முடைய மொழியை நம்முடைய மண்ணை மானத்தை காக்கக்கூடியவர்கள். சொன்னதை செய்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதற்கு சாட்சி தான் ஜெயராமபுரத்தில் கட்டப்பட்டுள்ள பொல்லான் திருவுருவ சிலை மற்றும் அரங்கம்.
இதையும் படிங்க: குட்நியூஸ்...!! விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!
சேலத்தில் நடந்த ஆதி தமிழர் பேரவை வெள்ளி விழாவின் போது மாவீரர் பொல்லானுக்கு சிலை மணிமண்டபம் அமைப்பேன் என உறுதியளித்தேன் அதனைத்தான் இப்போது திறந்து வைத்து இருக்கிறேன். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தீரன் சின்னமலை நம்பிக்கை உரிய தளபதியாக பொல்லான் இருந்தார். சினம் கொண்ட ஆங்கிலேய படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் தியாகத்தை காலத்திற்கு போற்றும் வகையில்நினைவு சின்னம் வேண்டும் என்ற கோரிக்கை திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வெளியான நாளிதழ் செய்தியில் வந்த செய்தி ஒன்றை படித்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவலைப் பெற்று, ஆதாரத்துடன் அந்த செய்தியை வெளியிட்டார்கள். அந்த செய்தியிலே குறிப்பிட்டு இருக்கிறார்கள், 2009ல் 193 அருந்ததியர் இன மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த நிலை மாறி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு மூலம் இந்த ஆண்டு 3944 மாணவர்கள் பொறியியல் படிக்கிறார்கள் என்றும், 2023 ஆம் ஆண்டிலே 193 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் எனவும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதில் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பெருமை என்னவென்று கேட்டீர்கள் என்றால், அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் வாய்ப்பு அடியேன் ஸ்டாலினுக்கு கிடைத்தது என்பதை பெருமையாக நினைத்தேன். ஒரு சமூகத்தினுடைய சமூக நீதியை கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பதில் இன்றைக்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுமட்டுமில்லை அந்த செய்தியிலே இன்னும் ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட்டிருக்கிறார்கள், அது என்னவென்றால் திமுக அரசு எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் போதும் முறையாக ஆராய்ந்து தரவுகளை எல்லாம் தொகுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்டு குழு அமைத்து அவர்களுடைய பரிந்துரைகள் எல்லாம் பெற்று சாமானிய மக்களுக்கு உரிய வகையில் உரிய பயன் அளித்து வந்தால் அது தான் பயனுடையதாக இருக்கும் என திமுக சட்டம் எப்போதும் வெற்றி பெற்றது தான் வரலாறு என்று பாராட்டி உள்ளார்கள்.
லட்சக்கணக்கான அருந்ததியர் மக்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றியதால் இந்த பாராட்டு தான், திமுக-வின் கொள்கை அடையாளம். எல்லாரும் எல்லாம் என்ற லட்சியத்தை அடைய வேண்டும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கை தரத்தையும் நிலையையும் உயர்த்த ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அருந்ததியர் மக்களுக்காக கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 விடுதிகள். 74கோடி ரூபாய் மதிப்பீட்டில் 107பள்ளி கட்டிடம், 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26சமுதாய கூடங்கள், 134கோடி ரூபாய் மதிப்பீட்டில் 131கிராம அறிவுசார் கூடம், அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 29 மாணவர்களுக்கு 10கோடி முப்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவித்தொகை, முழு நேர முனைவர்
ஆராய்ச்சி படிப்புக்காக 329 மாணவர்களுக்கு 3.29கோடி ரூபாய், தூய்மை பணியாளர்கள் நலவாரியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு 18225 பேர் உறுப்பினராக இருந்து நிலையில் அரசு சிறப்பாக செயல்பட்டு கடந்த 3ஆண்டுகளில் 3 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து உள்ளனர்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கனும். எல்லாரும் சமமாக வாழ வேண்டும் .என்ற சமூகம் உருவாக வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 2.0 திராவிட மாநாடு ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிப்பீர்கள் என கூறியும் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ஆரவாரமாக நீங்கள் என்னை மீண்டும் முதல்வர் ஆக்குவீர்கள் என கூறி உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்புச் சட்டம்..!! அனைத்து பள்ளிகளிலும் இத செய்யணும்..!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!