சென்னையின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக வளர்ந்து வரும் omr பகுதியில், சோழிங்கநல்லூர் அருகிலுள்ள காரப்பாக்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டெக் மகேந்திரா நிறுவனம் முக்கியமான தடத்தைப் பதித்துள்ளது. காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வளாகத்தில் அமைந்துள்ள இந்த கேம்பஸ், நிறுவனத்தின் சென்னை செயல்பாடுகளின் மையமாகத் திகழ்கிறது.
இது சென்னையின் IT துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும். டெக் மகேந்திரா, மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் 1,50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.

சென்னை வளாகம் அதன் முக்கிய மையங்களில் ஒன்று, குறிப்பாக உற்பத்தித் துறை தொடர்பான டிஜிட்டல் மாற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. 2025 ஜனவரி மாதம், நிறுவனத்தின் சோழிங்கநல்லூர் கேம்பஸில் அதிநவீன மையத்தை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
இதையும் படிங்க: 2 கிலோ மீட்டருக்கு குலுங்கிய பூமி... வெடித்துச்சிதறிய நாட்டு வெடிகள்... கும்பகோணத்தில் நடந்தது என்ன?
இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் அருகே காரப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெக் மகேந்திரா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானளவு எழும் கரும்பு புகையுடன் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவையே உலுக்கிய கோர சம்பவம்... 4 பேர் உடல் சிதறி பலி... மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு...!