தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் இறங்கி மீன்பிடிக்கும் மீன்வர்கள், இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஏராளம். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் நடுக்கடலில் சிக்கித் தவிப்பதும், மீன் கிடைக்காமல் கரைக்கு திரும்பும் சூழ்நிலையும் ஏற்படுவது உண்டு. மேலும் அவ்வப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகள் காரணமாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்லப்படுவது உண்டு. அப்படி தெரியாமல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது.
கடந்த வாரம் எல்லைத்தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக இலங்கை கடற்படை 25 காரைக்கால் மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் 22 பேரையும் அவர்களது 4 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். இப்படி இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலையும் தமிழகமே அதிர்ச்சி அடையும் வகையிலான செய்தி அரங்கேறியுள்ளது.
பாம்பன் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்து வருஷ போராட்டம்... செவிசாய்க்காத திமுக அரசு.. மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க சீமான் வலியுறுத்தல்..!