கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது அதன் பிறகு 100 அடிக்கும் குறையாமல் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று வரை 365 நாட்களாக 100 அடிக்கும் மேல் நீடித்து வருகிறது. மேட்டூர் அணையின் வரலாற்றில் ஒரே ஆண்டில் ஏழு முறை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சாதனை:
மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அணையின் வரலாற்றில் 44 வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பிறகு ஜூலை மாதம் 5 ஆம் தேதி இரண்டாவது முறையாக 120 அடியை எட்டியது.அதன் பிறகு மூன்றாவது முறையாக ஜூலை 20 ஆம் தேதி 120 எட்டியது. அதன் பிறகு நான்காவது முறையாக ஜூலை 25 ஆம் தேதி 120 அடி எட்டியது. ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ஐந்தாவது முறையாக 120 எட்டி எட்டியது. ஆறாவது முறையாக செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி 120 அடி எட்டியை எட்டிய மேட்டூர் அணை, தற்போது அக்டோபர் 20ஆம் தேதி ஏழாவது முறையாக முழு கொள்ளளவை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 35500 கன அடியாக உள்ளது
இதையும் படிங்க: #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93. 470 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 35,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் டெல்டா பாசனத்திற்காக 22,300 கன அடி நீ வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக 12700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை:
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அணையிலிருந்து தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 35,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை சுற்றியுள்ள தங்கமாபுரி பட்டினம், கேம்ப் ஹவுஸ், ஆர்எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்தை அதிகரித்துள்ளதால் 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி கரையின் நான்கு பகுதிகளிலும் நீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் பட்சத்தில் அணைத்து வரும் நீர் முழுமையாக வெள்ள நீராக வெளியேற்றப்படவும் அதிகாரிகள் அதற்கான பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக 50 ஆயிரம் கனடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதால் காவேரி கரையோர பகுதியில் உள்ள 13 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “எக்காரணம் கொண்டும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க...” - தமிழக மக்களுக்கு வெளியானது முக்கிய எச்சரிக்கை...!