11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக நவீன மிதிவண்டி, தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் பெறும் நிறுவனம், ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளை செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நவீன மிதிவண்டி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இவற்றுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளது. இதற்கான கொள்முதலுக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரீசனுடன் தொடர்பா?... என் கம்பெனியோட பாதி பங்கையே எழுதித் தரேன்... ஓபனாக சவால் விட்ட ஜி ஸ்கொயர் நிறுவனர்...!
தகுதியான உற்பத்தி நிறுவனங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம். அந்தக் கால அவகாசத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு கொள்முதல் ஆணை வழங்கப்படும்.
கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளில் இருந்து 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் அதனுடன் வழங்கப்பட உள்ள உபகரணங்கள் அனைத்தும் முழுமையாகக் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில், 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவீன மிதிவண்டி, தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்து, அந்த நிறுவனங்கள் மூலம் மிதிவண்டிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளிதான் தற்போது தமிழக அரசால் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?