திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி செப்டம்பர் 17 இடஒதுக்கீடு போராட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் போராடி உயிர் நீத்தவர்களுக்கு புகழுஞ்சலி வீரவணக்க செலுத்த கூடிய நாள் எல்லோரும் அதனை செய்ய வேண்டும், ஏராளமான போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் செய்தார். ஒருவார தொடர் சாலை மறியல் காரணமாக தமிழ்நாடே ஸ்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் . தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் பின் தங்கியவர்களுக்காக போராட்டம் நடந்தது.
இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர் காந்தியடிகள் வன்னியர்களுக்காக போராடியர் ராமதாஸ்,பல்வேறு போராட்டங்கள் செய்து அரசு பதவிக்கு செல்லாதவர் தான் மருத்துவர் ராமதாஸ் மிக பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் நினைத்து பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகு வர்த்தி அஞ்சலி நாளை செலுத்த உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கடித்தத்தினை காட்டி அரசியலை திசை திருப்பவும் மக்களை நம்ப வைக்கவும் கடிதம் காட்டப்பட்டதாகவும் அந்த கடித்ததில் திலக் தெரு என முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாமகவின் நிரந்தரமான முகவரி 63 நாட்டு முத்து நாயக்கன் தெரு தேனாம்பேட்டை என்பதை திலக் தெருவிற்கு மாற்றப்பட்டது. சூழ்ச்சியினால் கபட நாடகத்தினால் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அன்புமணி ராமதாஸ் 2022ல் பாமகவின் தலைவராக பதவி ஏற்று அவரது பதவி காலம் 28.05.2025 உடன் நிறைவு பெற்றது. அந்த பதவியில் இல்லாதவர் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தினை எப்படி கூட்ட முடியும் அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது அது தான் அமைப்பு விதி, மருத்துவர் ராமதாஸ் தான் பொதுக்குழு கூட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 30 ஆம் தேதியிலிருந்து ராமதாஸ் தான் தலைவர் என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய ராமதாஸ்... சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் மட்டுமே தலைவர் என சொல்லிக்கொண்டு கடிதம் எழுதுவது பொதுச்செயலாளர் என்பது மோசடி தான் முகவரி தேனாம்பேட்டையிலிருந்து திலக் தெருவிற்கு மாற்றபட்டது மோசடி. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் நிறுவனர் ஒப்புதலோடு தான் செய்ய வேண்டும், கடிதத்தினை காட்டி திலக் தெருவிற்கு மாற்றியது மோசடி, அதன் மூலம் மக்களை திசை திருப்ப பாலு பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார். மருத்துவர் ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை, மருத்துவர் ராமதாசை எந்த வகையிலும் கொச்சை படுத்துவது ஏற்க முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. அதனால் தேர்தல் ஆணையத்தை சந்தித்து மாம்பழம் சின்னத்தை வழங்க வலியுறுத்திவோம் அதன் மூலம் தேர்தல் ஆணையம் கொடுபார்கள் தலைவர் என்ற பெயரில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இது ராமதாசுக்கு சொந்தமானது முகவரி மாற்றம் தான் குழப்பத்திற்கு காரணம், முகவரி மாற்றம் செய்யப்பட்டது மருத்துவர் ராமதாசுக்கு தெரியாது.பாமக ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு விரைவில் வரும்.
பாமகவில் அய்யாவுடன் அன்புமணி சேர்ந்து நடப்பது தான் நல்லது எல்லாரும் ஏத்துகொள்கிற தலைவராக மருத்துவர் ராமதாஸ் உள்ளதாக தெரிவித்தார். பாமக்வில் இருவரையும் நான் தான் பிளவு படுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள் மருத்துவர் ராமதாஸ் நான் சொன்னால் கேட்பாறாரா என கேள்வி எழுப்பிய அவர், வாரிசு அரசியல் முன்னோர்காலத்தில் பேசப்பட்டது. வாரிசு அரசியல் என்பது திட்டமிட்டு திசை திருப்புவது. காந்திமதிக்கு நிர்வாக குழு உறுப்பினர் பதவி தவிர, வேறு பதவிகள் வழங்கும் எண்ணமில்லை என கெளரவ தலைவர் ஜி கே மணி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அன்புமணியை அழிக்கத் துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்..!