தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஏழை, எளிய மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறத்தொடங்கியது. இடையிடையில் சற்று குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று ஒரு சவரன் 71, 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமத்து 165 ரூபாய் குறைந்து 8,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய்க்கு குறைந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! 71 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை..!

தங்கம் விலை சற்று குறைந்தாலும், 71 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை ஆவது நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை... முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி...