நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, மேடையில் ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கும்போது மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டத்தை பெற மறுத்தார்.
பட்டத்தை ஆளுநர் ரவியிடம் இருந்து பெற்றுக் கொள்ளாமல் நேரடியாக துணைவேந்தரிடம் முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்டார் மாணவி. ஆளுநர் அழைத்தும் அருகில் சென்று பட்டம் பெற மறுத்த மாணவி துணைவேந்தரிடம் சென்று முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி தொடர்ந்து எதிராகவே செயல்படுவதால் அவரிடமிருந்து பட்டம் பெற மாணவி மறுத்ததாகவும், திராவிட மாடலை கடைப்பிடிப்பதாகவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: கட்சி தாவுறவங்க எங்கயும் நிலைக்க மாட்டாங்க! மைத்ரேயனை பூந்து விளாசிய இபிஎஸ்..!
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறி இருப்பதாக தெரிவித்தார்
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.
திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம் என்ன அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: இங்க வாலாட்ட முடியாது.. வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திமுக எதிர்க்கும்! என்.ஆர் இளங்கோ திட்டவட்டம்..!