தமிழ்நாட்டின் மிக முக்கியமான சாலைப்பாதைகளில் ஒன்றான ஜிஎஸ்டி சாலை, சென்னையை தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரு வாசல் போன்றது. இந்த சாலை, தினசரி லட்சக்கணக்கான வாகனங்களை சந்திக்கிறது என்றால், பண்டிகை காலங்களில் அது ஒரு பெரும் போர்க்களமாக மாறிவிடுகிறது.
பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளின் போது, குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் பெருந்திரளாக இந்த சாலையில் இறங்குவதால், கனரக வாகனங்கள்., அவற்றுள் லாரிகள், பேருந்துகள், ஓம்னி பஸ்கள் மற்றும் பிற கனமான வாகனங்கள், இதன் வேகத்தை மட்டும் இல்லாமல், பயணிகளின் வாழ்க்கையையும் கடினமாக்குகின்றன.

மதுராந்தகம் முதல் பெருங்களத்தூர் வரையிலான 50 கி.மீ. தொலைவில் பல மணிநேரங்கள் மக்கள் சிக்கிக் தவிக்கின்றனர்.வரும் இருபதாம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!
இன்று இரவு ஏராளமான சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. அது மட்டுமல்லாது நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்வதால் சாலையின் இரு புறங்களிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!