மதுராந்தகம் அருகே சுங்கச்சாவடியில் சுமார் ரூ.5.50 கோடிக்கு மேல் ஹவாலா பணம் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் இரவு சுமார் 2.30 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தை சென்னை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது இருவரிடம் இருந்து சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை ஹவாலா பணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரண்டு பெரிய சூட்கேஸ் மற்றும் புத்தக பண்டல் போல் இரண்டு பண்டல்கள் என நான்கை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: #BREAKING சென்னையில் மீண்டும் உண்ணாவிரதம்... தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது...!
இதனால் பேருந்ரை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகசோதனை நடத்தி பேருந்து காக்க வைத்ததால் பயணிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணேசன், அம்ரோஸ் ஆகிய இருவரை சென்னை அழைத்துச் சென்று வருமானவரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “ஆளவிடுங்கடா சாமி” - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ட்விஸ்ட்... 3 முக்கிய கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு...!