தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. கேரளா - கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காக்கெடுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தீபாவளி அன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை,புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தீபாவளி தினத்தன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 21ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிசுரு தட்ட கூடாது… நேர்த்தியா முடிங்க! நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்க விஜய் உத்தரவு…!
வரும் 22 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களிலும், 23ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கோவை, நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை! எத்தனை புயல் வரும்... என்னென்ன நடக்கும்..? தென் மண்டல தலைவர் அமுதா விளக்கம்...!