சென்னை உயர்நீதிமன்றம் இன்று பல்வேறு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசியலில் சமீபகால நிகழ்வுகளில் ஒன்றாக, துணை முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட சில முக்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடியானது.
இந்த நடவடிக்கைகள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

வருமானவரித்துறை விசாரணை கூறிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனதில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமானவரித்துறை விசாரணை கூறிய வழக்கம் தள்ளுபடி ஆகிறது.
இதையும் படிங்க: VIP தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க முடியாதா..? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..!!
பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவை விஜய் திருத்தி தாக்கல் செய்து விட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. மேலும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் ஆன வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!