திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்தும், பணம் வாங்கிக் கொண்டு பக்தர்களை கோவிலுக்குள் சிலர் அனுமதிப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி என்பவர் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், கடந்த மாதம் 16ம் தேதி பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற கோரியும், சண்முகர் விலாசம் முன்புள்ள கேட்டை அகற்றுவதற்காகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் கோவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் விதமாகவும், பக்தர்களுக்கிடேயே, கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் தொடர்ந்து வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது. மேலும், முருகரை மீட்க வேண்டும் என விளம்பரப்படுத்தி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக பக்தர்களை தூண்டி வருகின்றனர்.
இது தொடர்பாக திருச்செந்தூரை இந்து முன்னணி நகர துணைத்தலைவர் செந்தில்குமார் (34) உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் திருச்செந்தூர் கோவிலில் இருக்கும் திரிசுதந்திரர்கள், கோவில் பணியாளர்கள், பாதுகாவலர்கள் பற்றி உண்மைக்கு புறம்பாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக சுதந்திர பாபு நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கோவில் வளாகத்தில் நின்று கொண்டிருந்த செந்தில்குமாரை திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருச்செந்தூர் கோவில் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் பல்வேறு கைது செய்யப்பட்டது திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “வேண்டாம் இங்க ஜெபக்கூட்டம் நடத்தாதீங்க”... இட்டமொழியை அதிர விட்ட இந்து முன்னணியினர்... விநாயகர் சிலையுடன் அட்ராசிட்டி...!
இதையும் படிங்க: தர்கா அருகே அட்ராசிட்டி... இந்து முன்னணியினர் போலீசார் இடையே கைகலப்பு... முக்கிய நிர்வாகிகள் படுகாயம்...!