ஒசூர் அரசு மருதுவமனையில் கால் வலிக்கு மருத்துவரிடம் ஊசி போட்டு சென்ற பெண் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (40) இவரது மனைவி ரேஷ்மா (35) இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ரேஷ்மாவின் உடன் பிறந்த அக்கா மகளுக்கு ஒசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையையும் தாயையும் கவனிப்பதற்காக ரேஷ்மா அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ரேஷ்மாவுக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற்றுள்ளார் அப்போது மருத்துவர் அவருக்கு வலி நிவாரண ஊசி போட்டுள்ளாதாக கூறப்படுகிறது அதனைத்தொடர்ந்து ரேஷ்மா, மருத்துவமனையில் குழந்தை பெற்று இருந்த அக்கா மகளையும் அவரது குழந்தையையும் பார்ப்பதற்காக அந்த வார்டுக்கு சென்றுள்ளார். அப்போது பாத்ரூமுக்கு சென்ற ரேஷ்மா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை எழுப்பி பார்த்தது போது அவர் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவரும் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: நீங்க தான் மூடிக்கணும் ஸ்டாலின்! அந்த அவசியம் எங்க அண்ணனுக்கு இல்ல... கொந்தளிக்கும் அதிமுக
கால் வலிக்கு ஊசி போட்டு சென்றவர் சில மணி நேரத்தில் உயிரிழந்தது ரேஷ்மாவின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஒசூர் நகர போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினால் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனக்கூறி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்,பிரேத பரிசோதனைக்கு பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது, இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இனப் பகையை சுட்டெரிக்கும் நெருப்பு... தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டிய முதல்வர்