கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வட இந்திய ஆண்களும் பெண்களும் பங்கேற்றி இருப்பது தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. பொதுக்குழுவுக்கு வட இந்தியர்கள் வந்தது எப்படி? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அந்த கட்சியினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வட இந்திய இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றிருப்பது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு பாண்டிச்சேரியை தவிர்த்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. அப்படி இருக்கும்போது உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த பொதுக்குழுவிலே வந்து பங்கேற்றது எப்படி என்று இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக அந்த கட்சியில் இருக்கக்கூடிய இளைஞரணியை சேர்ந்தவர்கள், ஊடக பேரவையை சேர்ந்தவர்களே சோசியல் மீடியாக்களில் தாறுமாறாக கேள்வி எழுப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது பாமக சார்பில் நடைபெற்ற பிற கூட்டமாக இருந்தால் பரவாயில்லை வீதிகளில் நடக்கும்போது அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்பார்கள். ஆனால் இது பொதுக்குழு கூட்டம், இதற்கு என்று சில வரைமுறைகள் உள்ளன. அதனை ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் தான் நடத்துவார்கள். அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியாது. பொதுக்குழுவுக்கு கட்சியினுடைய உறுப்பினராக இருந்தாலும் கூட எளிதில் வந்துவிட முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொதுக்குழுவில் முக்கியமான நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் என கட்சியில் மிக மிக்க முக்கியமானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதையும் படிங்க: பாமகவில் மேலோங்கும் ‘அக்கா’ அரசியல்... மகளதிகாரத்தை தொடங்கி வைத்த ராமதாஸ்...!
அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எப்படி பாமக பொதுக்குழுவிற்குள் வட இந்தியர்கள் வந்திருக்கிறார்கள், ஓரிருவர் வந்திருந்தால் பரவாயில்லை குட்டி யானை என்று சொல்லக்கூடிய சிறிய வகை வாகனத்தின் மூலமாக சுமார் 100 பேரை அழைத்து வந்து அந்த கூட்டத்திலே பங்கேற்க வைத்ததாக தெரிய வந்திருக்கிறது. இது குறித்து சமூக வலைதலங்களிலே தெரிவித்திருக்கக்கூடிய கருத்து என்னவென்றால் ஓசூரிலே பல்வேறு தனியார் நிறுவனங்கள் இருக்கின்றது. இந்த தனியார் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் வட இந்திய இளைஞர்களும் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். அப்படி ஒடிசா அதேபோல பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றக்கூடிய அந்த வடமாநில இளைஞர்களை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்களுடைய பொதுக்குழுவிற்கு உட்காருவதற்கு ஆளில்லை. கூட்டமில்லை வெறும் காலி சார்களாக இருக்கிறது என்பதனால், அதனை நிரப்புவதற்காக வட இந்தியர்களை அழைத்து வந்து அமர்த்தினார்களா? என்ற ஒரு சந்தேகமும் எழுந்திருக்கின்றது.
இதுசம்பந்தமாக மீம்ஸ்களும் கூட அந்த கட்சியினரே வெளியிட்டிருக்கிறார்கள். பாமகாவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் பலரும் காலியாக இருக்கக்கூடிய சேர்களிலும், அதேபோல முன்வரிசைகளில் வட இந்தியர்கள் அமர்ந்திருப்பதையும் போட்டு மீம்ஸ்களாக செய்து தற்போது அதை இணையதளங்களிலே ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் வட இந்தியர்கள் பங்கேற்றது ஒரு பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் END? ராமதாஸ் - அன்புமணி தரப்பினரிடையே கடும் வாக்குவாதம்...