2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 13 ஆம் தேதி முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர். அரியலூரிலும் விஜய் பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து செப்டம்பர் 20 ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 11ல் குமரி நெல்லை தூத்துக்குடி அக்டோபர் 18ல் காஞ்சி வேலூர் ராணிப்பேட்டையில் விஜய் சுற்றுப்பயணம் நடத்துகிறார். அக்டோபர் 25ல் தென் சென்னை, செங்கல்பட்டு, நவம்பர் 11ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், நவம்பர் எட்டாம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் நடத்துகிறார். நவம்பர் 15ஆம் தேதி தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் 22ஆம் தேதி கடலூர், 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: “கேட்கல... சத்தமா...” விஜய் பேச்சைக் கேட்க முடியாமல் கதறிய தொண்டர்கள்... கடகடவென கலைந்த கூட்டம்...!
15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று முதல் நான்கு மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி வடசென்னையிலும் அக்டோபர் 25 ஆம் தேதி தென் சென்னையிலும் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க: தவெகவுக்கு மட்டும் இவ்ளோ RESTRICTIONS... அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு -விஜய்