வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம் ›

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் எந்தவொரு ஆக்கபூர்வமான ஆதாரங்களும் இல்லை என IAEA உறுதி செய்துள்ளது. ஈரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கதிர்வீச்சு அளவு  அதிகரிக்கவில்லை என்றும், தற்போதையச் சூழலில் எந்தவொரு கதிரியக்கக் கசிவும் ஏற்படவில்லை என்றும் கிராஸி தெரிவித்துள்ளார்.

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதற்கான அல்லது சேதமடைந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என IAEA கூறியுள்ளது. இருப்பினும், ஈரானிய அணுசக்தி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போதையச் சூழல் கவலையளிப்பதாகவும், அணுசக்தி மையங்கள் மீதானத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "Operation Midnight Hammer" என்ற பெயரில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணுசக்தி முகமையின் இந்த அறிக்கை சர்வதேச அரங்கில் அமெரிக்காவிற்கு ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்…! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी