தமிழ்நாட்டில் கள்ள மது என்பது தலைமுறைகளாக தொடரும் ஒரு கொடிய சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவைவிட பல மடங்கு விலை குறைவாகக் கிடைப்பதாலும், ஏழை மக்களிடையே எளிதாகப் பரவுவதாலும் இது ஒரு மாபெரும் சுகாதார மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினையாகத் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் கள்ள மது விற்பனையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பல தசாப்தங்களாக தொடரும் ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுவகைகளை விற்பனை செய்வதற்கு அரசு TASMAC மூலம் விற்றாலும் அதிக விலை, கடைகளின் எண்ணிக்கை குறைவு, மூடப்படும் நேரம், ஏழை மக்களின் வாங்கும் திறன் போன்ற காரணங்களால் கள்ள மதுவிற்பனை ஒருபோதும் ஒழியவில்லை.

கள்ள மது விற்பனை பெரும்பாலும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் அதிகம் காணப்படுவதாக கூறப்படுவது உண்டு. கள்ள மது விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!
இந்த நிலையில் திருத்தணியில் தங்கு தடையின்றி கள்ளத்தனமாக மதுபான விற்பனை செய்யும் ட்ரோன் வீடியோ வெளியாகி உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சாவகாசமாக கள்ள மது விற்பது தொடர்பான ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!