பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். பாமக மாநாட்டில் கொடி ஏற்றி வைத்தார் நிறுவனர் ராமதாஸ். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாமக மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
இதையும் படிங்க: பாமக வாகனங்களுக்கு தடை - 13 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை மறக்காத காவல்துறை...!
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும். ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அரசுத்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பணிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கிட வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் சிங்கள அரசு.. இனியும் மௌனம் காக்காமல் நடவடிக்கை எடுங்கள்.. ராமதாஸ் வலியுறுத்தல்..!