இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து எல்லை பகுதியில் 3வது நாளாக ராம்பனில் இருக்கக்கூடிய செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையினுடைய கதவுகள் திடீரென திறக்கப்பட்டிருப்பதால் பாகிஸ்தானை நோக்கி வெள்ளைநீரானது சீறிப்பாய்ந்து வருகிறது. இதன் மூலமாக பாகிஸ்தானுடைய பஞ்சாப் மாகாணத்துடைய சமவெளி பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய ஒரு சூழல் என்பது ஏற்பட்டிருக்கிறது.

1960 சிந்து நதி ஒப்பந்தத்தின்படி செனாப் நதி நீரை பாகிஸ்தானுக்கு ஒதுக்க வேண்டும என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பாஹல்காம் தாக்குதலுக்கு பின்பாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நீரும் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தியா செனாப் நதி நீரை அணைகளில் தேக்கி முழுமையாக நீர் வழங்குவதை தடுத்திருந்ததால் பாகிஸ்தானுடைய சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில வரட்சி ஏற்படக்கூடிய ஒரு சூழல் என்பது ஏற்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை வருமா? மக்களுக்கு திடீர் அறிவுறுத்தல்..!

இந்த நிலையில் தான் இந்தியா மீண்டும் உள்நாட்டு மற்றும் விவசாய பயன்பாட்டிற்காகவும் நீர்சக்தி காரணங்களுக்காகவும் சலால், பள்ளிக்கார் மற்றும் தூள் அசுத்தி உள்ளிட்ட நீர்மீன் திட்டங்களுக்காகவும் தற்போது நீரை திறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பனியில் இருக்கக்கூடிய செனாப் நதியின் மீது கட்டப்பட்ட பாக்லிஹார் அணை தற்போது கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக பாகிஸ்தானை நோக்கி சீறிப்பாயும் இந்த நீரால் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கூறப்படுகிறது.

பாகிஸ்தானை சுற்றி இருக்கக்கூடிய சிந்து மற்றும் அதேபோல் பஞ்சாப் மாகாணங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இது எங்கள் பூமி.. பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.. இலங்கை அரசு திட்டவட்டம்..!