இந்தியா நான்காவது முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டை புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில், இந்தியர்களாகிய நாம் மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம் புதுடெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்துவது நமக்கு மிகப்பெரிய கவுரவம்.
இந்தியா குவாட், ஜி7, ஐ2யூ2 உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா–இஸ்ரேல்–ஐக்கிய அரபு அமீரகம்–அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகளும் உள்ளன. அந்த வகையில், தற்போது பிரிக்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழுவாக உள்ளது. வாஷிங்டனும் ஐரோப்பிய நாடுகளும் இன்று இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
ஏனென்றால், இந்த உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்காவின் அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், அமெரிக்கா–ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அதிபர் இங்கு இருக்கிறார். அதேபோன்று, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இங்கு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!
தற்போது நடைபெற்று வரும் ஈரான் போரில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சமீபத்தில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதேபோன்று, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற முக்கியமான நாடுகளுடனும் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ள நிலையில், சில நேரங்களில் வாஷிங்டன், அதாவது டிரம்ப் நிர்வாகம், இதை எந்த அளவுக்கு விரும்புகிறது என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், அமெரிக்கா சில நாடுகளை வேறுபட்ட முறையில் அணுகுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏற்கனவே பிஷ்கெக்கில் நடைபெற்ற எஸ்ஓசி மாநாட்டில் பிரதமர் மோடியும் ஈரான் அதிபரும் சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பின்போது, ஈரானுடன் இந்தியா வர்த்தக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவும் சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், ஈரானுடன் நல்ல உறவை வைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால், இந்தியா யாருக்கும் பயப்படுவதும் இல்லை, பயப்படப் போவதும் இல்லை. நாங்கள் எங்களுடைய நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது.
பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கித்தான் இந்தியா சென்று கொண்டிருக்கிறோம். அந்த வகையில், நமது பொருளாதார வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளுடன் நல்ல முறையில் இருக்கும். அதேபோன்று, அமெரிக்காவும் முக்கியமான நாடு. நாம் அவர்களை ஒதுக்கி வைக்க முடியாது. எப்படிப் பார்த்தாலும், அமெரிக்காவுடன் நாம் வர்த்தகம் செய்ய வேண்டும்; தற்போது வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், நமது வளர்ச்சிக்கு யாரும் தடை போட முடியாது. நமது வளர்ச்சியைத் தடுக்கவோ, முற்றிலும் கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!