ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. மத்திய அரசு பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால் காதலுக்காக பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு வந்த அந்தப் பெண் சீமா ஹைதருக்கு என்ன நடக்கும்..? சீமா ஹைதர் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்தார்.

சீமா ஹைதர் தொடர்பான அனைத்து ஆவணங்களும் உள்துறை அமைச்சரிடமும், ஏடிஎஸ்ஸிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஏபி சிங் தெரிவித்தார். சீமாவின் கருணை மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. ஜாமீனின் போது நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் பின்பற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். சீமாவும் அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா நாடகம் ஆடுகிறது... இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள்- லஷ்கர்-இ-தொய்பா அழுகுனியாட்டாம்.!

சீமாவின் மகள் ஒரு இந்திய குடிமகள். சீமாவின் குடியுரிமைக்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்தியாவில் சீமா ஹைதருக்கு எதிராக ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார் வழக்கறிஞர் ஏ.பி. சிங்.

டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அபு பக்கர் சப்பக் இதுகுறித்து, 'எந்த சூழ்நிலையிலும் அனைத்து பாகிஸ்தான் குடிமக்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். சீமா ஹைதரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இருப்பினும் இதைச் செய்வது எளிதானது அல்ல. சீமா ஹைதரை இந்தியாவில் தங்க அனுமதிப்பதா? இல்லையா? என்பது மாநில அரசைப் பொறுத்தது.

கவனிக்க வேண்டிய மற்றொரு உண்மை என்னவென்றால், சீமா ஹைதர் இந்திய குடிமகன் சச்சின் மீனாவை மணந்தார். அவருக்கு சச்சினிடமிருந்து ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், உ.பி. அரசிடமிருந்து பாதகமான அறிக்கை வந்த பின்னரே சீமா ஹைதர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவர் கூறினார்.
இதையும் படிங்க: எல்லையை மூடிய பாகிஸ்தான்... இந்திய விமானங்களுக்கு தடை! வெடிக்கும் சர்ச்சை...