வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

விஜயை வைத்து காங்கிரஸ் பேரம்… அப்பவே திமுக அனுப்பி விட்டுருக்கணும்..! சீமான் விமர்சனம்..!

விஜய் வைத்து காங்கிரஸ் கட்சி பேரம் பேசுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சில கட்சிகள் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்து பேசி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் இதை மிகவும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 40 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்ப்பதோடு, வெற்றி பெற்றால் அமைச்சரவையில் சில பதவிகளைப் பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

இது திமுகவுக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அண்மையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளார். அவர்களது கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்தாலும், வெறும் தொகுதி ஒதுக்கீடு மட்டுமே போதாது, ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இது போன்ற சம்பவங்கள் திமுக கூட்டணியின் இடையே பிளவை ஏற்படுத்தும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்ற கூட்டணி கட்சியினரின் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தை பொறுத்தவரை ஒத்து வராது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கிராம சுகாதார பணியாளர்களை தவிக்க விட்ட திமுக அரசு… வறுமையில் வாடும் குடும்பங்கள்..! குரல் கொடுத்த சீமான்..!

ஆட்சியில் பங்கு என்பது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசி வருவது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஆட்சியில் பங்கு கேட்ட போதே காங்கிரஸை கூட்டணியில் இருந்து அனுப்பி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது விஜயை வைத்துக் கொண்டு காங்கிரஸ் பேரம் பேசி வருவதாக சீமான் விமர்சனம் செய்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜயும் கூறி வருகிறார் என சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொடுமை..! மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறை… திமுகவை கண்டித்த சீமான்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी