மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரானுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ளது. இங்கு ஈரான் தனது புரட்சிகர காவல்படை மூலம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, பல நாடுகளின் கப்பல்களை தடுத்து உள்ளது. ஆனால், இந்தியக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு குறிப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறியதாவது, "ஈரான் இந்திய கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கவில்லை" என்றும், இந்திய எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு மிகுந்த நிவாரணமாக அமைந்துள்ளது.

ஏனெனில் இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்து ஹோர்முஸ் வழியாகவே பெறுகிறது.இதற்கு மாறாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் சில அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூட, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதர்களை நாட்டை வெளியேற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயண அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.
இதையும் படிங்க: அப்பாடா...!! - இந்தியாவை நிம்மதி பெருமூச்சு விட வைத்த ஈரான்... ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் முக்கிய முடிவு...!
ஆனால் இந்தியாவுக்கு இத்தகைய நிபந்தனை எதுவும் இல்லை. இந்தியக் கப்பல்கள் தொடர்ந்து ஹோர்முஸ் வழியாக சென்று வருவதற்கான கடல் போக்குவரத்து தரவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஈரான்-இஸ்ரேல் போர்: 30 நாள் தான்.. ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்..!! அமெரிக்கா பர்மிஷன்..!!