ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தி வரும் ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி வான்வழித் தாக்குதலில், ஈரானின் உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறையின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உச்சத் தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட அதேத் தாக்குதலில் இந்த உயர்மட்ட அதிகாரிகளும் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தேசிய போலீஸ் உளவுப்பிரிவுத் தலைவரான ஜெனரல் குலாம்ரேசா ரெசாயன் , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இவருடன் உளவுத்துறையின் மூத்த அதிகாரியான முகமது பசேரியும் உயிரிழந்துள்ளார்.
தெஹ்ரானில் உள்ள ஈரானின் 'உயர்மட்டத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில்' மற்றும் உளவுத்துறை அலுவலகங்களைக் குறிவைத்து இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் வழங்கியத் துல்லியத் தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறும் ஈரான்..!! எதிர்க்க நாங்க தயார்..!! பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை..!!
கமேனி மற்றும் உளவுப்பிரிவுத் தலைவருடன் சேர்த்து, ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் அஜிஸ் நசீர்சாதே மற்றும் ராணுவத் தலைமை அதிகாரி அப்துல் ரஹீம் மொசாவி ஆகியோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதை ஈரான் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஈரானின் ஆன்மீகத் தலைமை, ராணுவத் தலைமை மற்றும் உளவுத் தலைமை ஆகிய மூன்றும் சிதைக்கப்பட்டுள்ளதால் ஈரான் நாடு வரலாறு காணாதத் தலைமை வெற்றிடத்தைச் சந்தித்துள்ளது. ஈரானின் அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிட முடியாமல் அந்நாட்டு ராணுவம் நிலைகுலைந்துள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தாக்குதலை "முன்னெச்சரிக்கை நடவடிக்கை" (Pre-emptive attack) என இஸ்ரேல் வர்ணித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது உலகிற்கே ஒரு மிகச்சிறந்த நாள் எனப் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் மீது 3000 குண்டுகள் வீச்சு; 555 பேர் பலியான அதிர்ச்சி - "இன்னும் தாக்குவோம்" என ட்ரம்ப் எச்சரிக்கை!