• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பழிக்கு பழி!! அமெரிக்க ராணுவ கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்! மூளும் போர்?!

    ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியதாக டிரம்ப் கூறிய நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
    Author By Pandian Mon, 20 Apr 2026 12:51:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Launches Drone Attacks on US Ships After Trump Orders Seizure of Iranian Cargo Vessel Touska | Hormuz Tensions Rise

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய சம்பவங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், ஏப்ரல் 8-ம் தேதி இரு தரப்புக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தத்துடன் ஓய்வு பெற்றது. இந்த போர் நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

    ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பாகிஸ்தான் தலைநகரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட உயர்மட்டக் குழு பங்கேற்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் ஈரான் தரப்போ இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தற்போது எந்த திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    இந்த சூழலில், ஈரானிய கொடி பறக்கும் ‘டூஸ்கா’ என்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கி சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 900 அடி நீளமுள்ள இந்தக் கப்பல், அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறி செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார். 

    HormuzStrait

    அமெரிக்க கப்பல் (USS Spruance) எச்சரிக்கை விடுத்தும் ஈரானிய கப்பல் குழுவினர் அதை பின்பற்றாததால், எஞ்சின் அறையில் துளை ஏற்படுத்தி நிறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கப்பல் அமெரிக்க மரைன்ஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் இந்த சம்பவத்தை “ஆயுதமேந்திய கொள்ளை” எனக் கண்டித்து, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான், உலக எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகித்து அமைதிப் பேச்சை மீண்டும் முயற்சித்து வருகிறது. ஆனால் இரு தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளதால், புதிய பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது. உலக நாடுகள் இந்தப் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    இந்த சம்பவங்கள் உலகப் பொருளாதாரத்தையும், பிராந்திய அமைதியையும் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அடுத்த சில நாட்களில் ஏற்படும் திருப்பங்கள், சூழலை எப்படி மாற்றும் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் அட்டூழியம் தாங்கவில்லை! விஜய் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய செங்கோட்டையன்!

    அதிமுகவில் அட்டூழியம் தாங்கவில்லை! விஜய் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    கொள்கை இருந்தாலே வெல்ல முடியும்! சீமானின் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை!

    கொள்கை இருந்தாலே வெல்ல முடியும்! சீமானின் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை!

    தமிழ்நாடு
    நான் கண்ட கனவை செயல்படுத்துகிறார் அன்பில் மகேஸ்! திருவெறும்பூரில் கமல்ஹாசன் புகழாரம்!

    நான் கண்ட கனவை செயல்படுத்துகிறார் அன்பில் மகேஸ்! திருவெறும்பூரில் கமல்ஹாசன் புகழாரம்!

    தமிழ்நாடு
    சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

    சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

    தமிழ்நாடு
    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share