அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகினார். தற்போது டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனார். இந்த நிலையில் ஜோ பைடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாகவும், இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு 5) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீவிரமான புற்றுநோய் எனக் கூறப்படும் நிலையில் பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

ஜோ பைடனின் உடல்நிலை குறித்த தகவல்கள் வருத்தம் அளிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% TAX ! இடியை இறக்கிய டிரம்ப்...ஆடிப்போன இந்தியர்கள்