விழுப்புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான பாலகிருஷ்ணன் கலந்துக் கொண்டு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக செயல்பட்ட அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
பாஜகவின் இறந்த பிணத்தை எவ்வளவோ உயிர் ஊட்டுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அது நடக்கவில்லை என்பதால், மாறுவேஷம் போட்டு மற்றொரு கட்சி ஆரம்பித்தாலாவது எதுவாது செய்யமுடியுமா என முயற்சி செய்கிறார்கள். இந்துதுவா சனாதன கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டு மத்தியில் இருக்கிற பாஜகவின் முகத்தை மாற்றி வேறொரு பெயரில் கட்சி ஆரம்பிப்பதால் தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கினை பெற முடியாது. மீண்டும் ஒருமுறை அண்ணாமலை தோல்வி அடையபோகிறார் என்று தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சராக உள்ள சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும்போதே மேகதாதுவில் அனையை கட்டியே தீருவேன் என சபதம் ஏற்கிற வகையில் செயல்பட்டார். மேகதாதுவில் அணைகட்டுவது ஒரு மாநில பிரச்சனை அல்ல. காவிரி என்பது பல மாநிலங்களுக்கு சொந்தமானது. மேல் பகுதியில் அனைகட்டுவது என்பது கர்நாடக அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேகதாதுவில் அனைகட்டவேண்டும் என்று கர்நாடக மக்கள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்திற்காகவும் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதிக்கத்தை செல்வாக்கை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதால் டிகே.சிவக்குமார் மேகதாது பிரச்சனையை எழுப்பியிருக்கிறார். அதே அரசியல் ஆதாயத்தை பெறவேண்டுமென மத்திய அரசும் செயல்பட்டிருக்கிறது. மேகதாதுவில் அனைகட்டும் முயற்சியை தமிழநாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் மக்களும் சேர்ந்து முறியடிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?
அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளதில் தவெக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற முறையில் திட்டமிடுதல் இருக்க வேண்டும். முதல் கட்ட அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும். பெண்களுக்கான உதவித்தொகை, பணி நிரந்தரம், காலி இடங்களை நிரப்புதல், விவசாயிகளுக்கான அறிவிப்புகளாக இருக்கும் வகையில் இருக்க வேண்டுமென கூறினார். தொழிலாளியின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தவெக அரசு செயல்பட வேண்டும் மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளிகளுக்கு எதிரான நான்கு சட்டங்களுக்கு எதிராக கேரளா அரசு கோபால் கமஷன் அமைத்தது போல் செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.
தவெக ஆட்சிக்கு வந்தபிறகு தான் பெண்களுக்கு குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்பது இல்லை முன்பு இருந்த அரசுகள் இருந்தபோதும் இருந்தது அதற்கு அடிப்படையாக போதை கலாச்சாரம் தான் காரணம் அதனை கட்டுபடுத்த நடவடிக்கையை தவெக அரசு எடுத்து வருகிறது ஆனால் இது போதாது ஒரு பெண்ணுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பற்ற நிலை இல்லை என்ற அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இடைத்தேர்தல் வந்தபிறகு பார்க்காலாம் இடைத்தேர்தல் என்பது 5 தொகுதிகளுக்கு மட்டும் வருமா அல்லது 25 தொகுதிகளுக்கு மட்டும் வருமா என்பது கேள்வி குறியாக உள்ளது அது தெளிவான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவெடுக்கும் என்றும் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு திருச்சியில் பேசிய விஜய் மதச்சார்பற்ற அரசாக இருக்கும் அவர் பேச்சில் பெரிய குறை இருப்பதாக தெரியவில்லை அவர் உடல்மொழியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தனிக்கட்சியா? பாஜகவா?... இறுதி முடிவெடுத்த அண்ணாமலை... நாளை வெளியாகிறது அறிவிப்பு?