அண்மைக் காலங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், தவெக தலைவர் விஜய் என பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நீலாங்கரையில் பரபரப்பு..!!
இந்த நிலையில், மாநிலங்களைவை உறுப்பினர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்திய நிலையில், மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்… மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீஸ் குவிப்பு…