ஜூலை 15 ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் அரசியல், கல்வி மற்றும் சமூக வரலாற்றில் ஒரு முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெருந்தலைவர் கு. காமராஜரின் பிறந்த நாள் இன்று முழு மாநிலமும் மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் நினைவுகூரப்படுகிறது. 1903ஆம் ஆண்டு இந்த நாளில் விருதுநகரில் பிறந்த காமராஜர், தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும், குறிப்பாக ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்த தலைவராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இன்றைய கொண்டாட்டங்கள் அவரது பங்களிப்புகளை நினைவூட்டுவதோடு, அவரது கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன
அவரது ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான சாதனை கல்வித்துறையில் ஏற்படுத்திய புரட்சியாகும். கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த காமராஜர், இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார். பள்ளிகளை ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒன்று என்ற அளவில் திறந்தார். ஆயிரக்கணக்கான பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டன. மாணவர்களின் வருகை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தீர்க்கவும் மதிய உணவுத் திட்டத்தை இந்தத் திட்டம் இன்றும் நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு முன்னோடி முயற்சியாகத் திகழ்கிறது.

இந்தச் சாதனைகளுக்காக அவருக்கு “கல்வித் தந்தை” என்ற பெருமை சூட்டப்பட்டது. கல்வியறிவு விகிதம் பெருமளவில் உயர்ந்தது, ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு பெருகியது.கல்வியோடு மட்டுமல்லாமல், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழிலகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல துறைகளிலும் காமராஜர் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். அவரது ஆட்சி எளிமை, நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தின் சின்னமாக விளங்கியது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எளிமையைப் பின்பற்றினார். பிரதமர் பதவிக்கு வர மறுத்து, மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய அவரது முடிவு அவரது தியாக உணர்வைப் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: வெட்கம், மானம் இருந்தால் திமுககாரங்க வராதீங்க... நேரடி எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்...!
பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக உயர்த்திய “கிங் மேக்கர்” என்ற பெயரையும் பெற்றார்.இன்று அவரது பிறந்தநாள் “கல்வி வளர்ச்சி நாள்” என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இன்று காமராஜரின் 124 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வின் போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: புகைப்படத்தால் புகைச்சல்... கும்பகோணம் நகராட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களால் பரபரப்பு...!