தம்மத்துக்கோணம் வி.ஐ.பி கார்டன் பகுதியிலுள்ள தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 118 சாவரன் தங்க வைர நகைகள் 50-ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்ற நிலையில் புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீஸார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தம்மத்துகோணம் வி.ஐ.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். தொழிலதிபரான இவர் ஏலக்காய் வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது இவரும் இவரது மனைவி மதுமிதா வும் குழந்தையுடன் வியாழக்கிழமை மாலை ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பதற்காக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர்
வீடு திரும்பிய தம்பதியர் வீட்டின் படுக்கையறைக்கு சென்ற போது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 118 சவரன் தங்க நகைகள் வைர நகைகள் மற்றும் 50.ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் மாயமாகியிருந்ததால் அதிர்ச்சியடைந்து ராஜாக்கமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்
இதையும் படிங்க: ‘வேலியே பயிரை மேய்ந்தது!’... தொழிலதிபர் சேகர் ரெட்டில் வீட்டில் பல கோடி திருட்டு... வெளியான பகீர் பின்னணி...!
தகவலறிந்து அங்கு வந்த ராஜாக்கமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தியதில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷினால் அறுத்து அகற்றி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் படுக்கையறைக்குள் புகுந்து பீரோவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 118 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது
இதனையடுத்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடி ராஜாக்கமங்கலம் போலீஸார் தேடி வருகின்றனர்
இதையும் படிங்க: ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!