காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (ஜனவரி 13, 2026) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இன்று அதிகாலை முதல் காரைக்காலில் மழையின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால், சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
காரைக்காலில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டுப் பெய்து வந்த மழை, இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழையாக மாறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், வானிலை ஆய்வு மையம் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனினும், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போலச் செயல்படும் எனத் தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்கு முன்பாகவே மழையினால் ஒரு நாள் விடுமுறை கிடைத்துள்ளது மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "மழை விடாது போலயே!" வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. டெல்டா மாவட்டங்களுக்கு அலர்ட்!
இதையும் படிங்க: பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்...!