தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு அண்டை மாநிலங்களுக்கும் இடையே பல தசாப்தங்களாகத் தீராத நதிநீர் விவாதமாக உருவெடுத்துள்ள மேகதாது அணை (Mekedatu Dam Project) விவகாரம், தற்பொழுது மீண்டும் புதிய உச்சக்கட்ட அனலைப் பறக்கவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நேற்று முறைப்படி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. டி.கே.சிவக்குமார் அவர்கள், இன்று டெல்லிக்குச் செல்லும் முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு காட்டி வரும் அசாத்திய எதிர்ப்புகள் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே சமநிலை நீர்த்தேக்கம் கட்டும் கர்நாடகாவின் மெகா திட்டத்திற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருவது குறித்துப் பேசிய டி.கே.சிவக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் எந்தவொரு கட்சி இருந்தாலும் சரி, யார் இருந்தாலும் சரி, அவர்கள் தொடர்ந்து அரசியல் (Politics) செய்யத்தான் செய்வார்கள் என்று சாடினார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் மேகதாது அணைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் தற்பொழுது புதிதாகப் பரபரப்பு கிளப்ப எதுவும் இல்லை. இந்த அணை விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துவிட்டன. தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் அடியோடு தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, நாங்கள் முழுமையாகச் சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களின்படியே (Legal Guidelines) தற்பொழுது செயல்பட்டு வருகிறோம் என்று மிகத் தீர்க்கமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
நாங்கள் எங்களது கடமையைச் செய்கிறோம், அவர்கள் (தமிழ்நாடு) தங்களது வேலையைப் பார்க்கட்டும் என்று குறிப்பிட்ட அவர், பெங்களூருவின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க 4.75 டிஎம்சி கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள இந்த அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பித்து, ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாகப் பூமி பூஜை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!