இந்தியாவின் தென்கிழக்கு மாநிலமான கர்நாடகா, பெண்களின் மாதவிடாய் உடல்நலத்தை அங்கீகரித்து, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கும் கொள்கையை 2025-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் மாநிலமாக, தனியார் மற்றும் அரசுசார் துறைகளில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த விடுமுறையை கட்டாயமாக்கியுள்ளது.
இந்தக் கொள்கை, பெண்களின் உடல் ரீதியான சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் தொழில் மற்றும் கல்வி வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. கர்நாடகாவில் வேலை செய்யும் பெண்கள், 18 முதல் 52 வயது வரையிலானவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை பெறலாம்.

இது ஆண்டுக்கு மொத்தம் 12 நாட்களாக இருக்கும். இந்த விடுமுறை, அரசு அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னியல் நிறுவனங்கள், ஆடைகள் தொழிற்சாலைகள், கிடங்குகள், போக்குவரத்து நிறுவனங்கள், தோல் பொருட்கள் தயாரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் பொருந்தும். நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், இன்டர்ன்கள் மற்றும் கிக் வொர்க்கர்கள் உட்பட அனைவருக்கும் இது அனுமதிக்கப்படும்.
இதையும் படிங்க: ஆன்லைன் குதிரைப் பந்தயத்திற்கு அனுமதி அளித்த அரசு..!! எந்த மாநிலம் தெரியுமா..??
முக்கியமாக, இந்த விடுமுறை செல்ப், சிறப்பு விடுமுறை போன்றவை தாண்டியே வழங்கப்படும், அதாவது இது கூடுதல் நன்மையாகும். கர்நாடகாவில் பெண் பணியாளர்களைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு... அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்...!