தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வேலுச்சாமிபுரம் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. அன்றைய தினம் வரலாற்றில் கருப்பு நாளாக இடம் பிடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. தமிழக அரசு அமைத்த தனிநபர் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படும் என்றும் எனவே சிபிஐ விசாரணைக்கு கரூர் சம்பவம் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான பொது நல மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரட்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், கரூர் சம்பவம் நடந்த இடத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் ஆதவ் அர்ஜுனா... உண்மை வெளிவரும் என திட்டவட்டம்...!
காவல்துறையினரிடமும், அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கரூர் சம்பவம்... தாராளமா செய்ங்க! கிரீன் சிக்னல் காட்டிய நீதிமன்றம்...!