குளித்தலை அருகே மாயனூர் பகுதியில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தனார், பெண் சித்தாள்கள் 2 பேர் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணவாசி பகுதியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் கொத்தனார் சுரேஷ்குமார் மற்றும் சித்தாள் சித்ரா, ராமாயி உட்பட மூன்று பேர் வீடு திரும்பும் வழியில் மாயனூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார் அப்போது முன்னால் சென்ற பேருந்தை முந்திக் கொண்டு செல்ல முயன்ற பொழுது இருசக்கர வாகனத்தில் மோதி மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கை கால்கள் சிதறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஒரு ப்லொவ்ல வந்திருக்கும்... மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதற்கு எடப்பாடி கொடுத்த தக் பதில்...!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ரஞ்சித்தை மாயனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "QUIT SIR" - நெருப்புடன் விளையாடாதீங்க - ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே பாஜகவை எச்சரித்த ஸ்டாலின்!