அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக - பாஜக தலைமையிலான கூட்டணி களம் இறங்கி உள்ளது. முன்னதாக அண்ணாமலை பாஜக தலைவராக இருந்த போது இரண்டு கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது.
இதனால் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தலையிட்டு நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக்கினார். அதன்பின்னர் தான் அதிமுக - பாஜக கூட்டணி சிக்கல் இல்லாமல் தொடர்கிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் தான் டார்கெட்! வழக்கு போட தயாராகும் திமுக! ஐகோர்ட் முதல் திருமா வரை அழுத்தம்!
இதனால் அதன்பின் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்திலும் சரி, அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்திலும் சரி அண்ணாமலை பங்கேற்காமல் தவிர்த்தார். அதற்கு வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் கட்சி தலைமை மீதான வருத்தமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதற்கிடையே கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது. திமுக - பாஜகவை எதிர்த்து களமிறங்கிய தவெக தலைவர் விஜய் கரூர் நெரிசல் சம்பவத்தால் கடும் சிக்கலில் உள்ளார்.
இந்த நிலையில் விஜயை ஆதரித்தும், திமுகவை எதிர்த்தும் அதிமுக பாஜக கூட்டணி பிரசாரம் செய்ய துவங்கி உள்ளது. விஜய்க்கு போன் செய்து பேசிய அமித் ஷா கூட்டணிக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. டெல்லி சென்ற தவெக பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜூனாவும் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இது போக செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்ததும், டிடிவி தினகரம், ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ள பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகவும், தமிழகத்தில் நடைபெறும் அரசியல் கள நிலவரம் குறித்து விவரிக்க உள்ளதாகவும் கூட்டணி கட்சிகள் குறித்தும், தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது.
இதையும் படிங்க: திமுக? அதிமுக? தவெக? என்ன முடிவு பண்ணப்போறீங்க! ராமதாஸ், அன்புமணியுடன் தனித்தனியாக சந்திப்பு!