தமிழக அரசியலில் ஜெ. ஜெயலலிதா என்ற பெயர் என்றென்றும் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட அவரது வாழ்க்கை, சினிமாவில் இருந்து அரசியல் வரை பல சுவாரசியமான திருப்பங்களால் நிறைந்தது.
ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல கேள்விகள் உள்ளன. அதிலேயே மிகப் பெரிய பேசுபொருளாக இருப்பது அவருக்கு ஒரு மகள் இருந்ததா? என்ற கேள்விதான். இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்பி வருபவர்களில் ஒருவர் தான் ஜெயலட்சுமி. ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான் தான் என்று பல ஆண்டுகளாக இவர் கூறி வருகிறார். 2023 செப்டம்பரில் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியதாக அறிவித்தார்.
2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் அப்போது கூறினார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது, நான் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்வதால் எனக்கு தடங்கல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்... 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் EPS..!

இந்த நிலையில் ஜெயலக்ஷ்மி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்துள்ளதாகவும் கூறிய போது அதிமுகவினர் விரட்டிய உள்ளனர். அப்போது பேசிய ஜெயலட்சுமி, தான் விருப்ப மனு பெறும் போது அமைதியாக இருந்துவிட்டு நேர்காணலுக்கு வரும்போது தகராறு செய்வதாக தெரிவித்தார்.
தனது காரை சேதப்படுத்தி விட்டதாகவும் தன்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவு இல்லாமல் இவை நடக்குமா என்று கேள்வி எழுப்பியவர் என்ன எடப்பாடி யாரை பயந்துட்டீங்களா என்று கேட்டார். இதற்கு பின் விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கண்டுக்காத எடப்பாடி! கலக்கத்தில் ஓபிஎஸ்! கூட்டணியா? தனிக்கட்சியா? 2வது நாளாக ஆலோசனை!