தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் இன்னும் தொடர்கின்றன என்பதை உணர்த்தும் கொடூரமான சம்பவம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 2025 ஜூலை 27 அன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கவின் செல்வகணேஷ் படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் ஐடி பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
கவின், திருநெல்வேலியில் சித்த மருத்துவராகப் பணியாற்றிய சுபாஷினியை பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்களாகத் தொடங்கி, ஏழு ஆண்டுகளாக உறவு வைத்திருந்தனர். சுபாஷினியின் தம்பி சுர்ஜித் இந்த உறவை எதிர்த்தார். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கவினை சந்திக்க அழைத்துச் சென்ற சுர்ஜித், சாதி ரீதியாக இழிவாகப் பேசி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார்.

இந்தக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவினின் குடும்பத்தினர் சுர்ஜித்தின் பெற்றோர் துணை ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதும் குற்றம் சாட்டினர். போலீசார் சுர்ஜித்தை உடனடியாகக் கைது செய்தனர். பின்னர் அவரது தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. SC/ST சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. கவினின் உடலை ஒப்படைக்கக் கோரி குடும்பத்தினர் ஐந்து நாட்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவ கொலை..!! தலைமறைவான சுர்ஜித்தின் தாய் ARREST..!!
சமீபத்தில் தலைமறைவாக இருந்த சுஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தையான சரவணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. சாட்சியங்களை அழிக்கும் எந்த ஒரு முயற்சியிலும் அவர் ஈடுபடக் கூடாது என்றும் ஒரு லட்ச ரூபாய் பிணை பத்திரம் வழங்கி விட்டு ஜாமினில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் மறு உத்தரவு வரும் வரை சரவணன் கோவையில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கின் சாட்சியங்களை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!