தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் இன்னும் தொடர்கின்றன என்பதை உணர்த்தும் கொடூரமான சம்பவம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 2025 ஜூலை 27 அன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கவின் செல்வகணேஷ் படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் ஐடி பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
கவின், திருநெல்வேலியில் சித்த மருத்துவராகப் பணியாற்றிய சுபாஷினியை பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்களாகத் தொடங்கி, ஏழு ஆண்டுகளாக உறவு வைத்திருந்தனர். சுபாஷினியின் தம்பி சுர்ஜித் இந்த உறவை எதிர்த்தார். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கவினை சந்திக்க அழைத்துச் சென்ற சுர்ஜித், சாதி ரீதியாக இழிவாகப் பேசி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார்.

இந்தக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவினின் குடும்பத்தினர் சுர்ஜித்தின் பெற்றோர் துணை ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி மீதும் குற்றம் சாட்டினர். போலீசார் சுர்ஜித்தை உடனடியாகக் கைது செய்தனர். பின்னர் அவரது தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கவினின் குடும்பத்தினர் ஐந்து நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இந்த நிலையில் மென்பொருியாளர் கவின் ஆணவ படுகொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த எஸ்ஐ கிருஷ்ணகுமார் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயார் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சர்ச்சைகளுக்கு டாட்..! MLA-வாக பணியாற்றுவேன்..!! C.V. சண்முகம் உறுதி..!!