கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சதீசன், பிரதமரை சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (மே 27) டெல்லி செல்ல உள்ளார். காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் முதல்வர் விஜய், மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் இரு மாநிலங்களின் நலன் தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளார். தமிழக அரசின் முக்கிய திட்டங்கள், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு திட்டங்கள், தொழில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் விரிவாகப் பேசப்படும் என்று த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

கேரளாவில் யுடிஎஃப் ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே முதலமைச்சர் சதீசன் பிரதமரை சந்தித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இரு மாநில முதலமைச்சர்களும் அடுத்தடுத்து பிரதமரை சந்திப்பது தென் இந்திய அரசியல் சூழலை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முதல்வர் விஜய்யின் இந்த முதல் டெல்லி பயணம், த.வெ.க., அரசின் எதிர்கால உறவுகள் மற்றும் திட்டங்களுக்கு புதிய பாதையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா மற்றும் தமிழகம் இரு மாநிலங்களும் மத்திய அரசுடன் நல்லிணக்கத்துடன் செயல்படும் என்பதை இந்த சந்திப்புகள் உறுதிப்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!