இந்தியாவில், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மேற்கொள்கிறது. இந்தச் செயல்முறையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவது, மற்றும் பிழைகளைத் திருத்துவது ஆகியவை அடங்கும். இந்தத் திருத்தம் தேர்தல்களின் நேர்மையை உறுதி செய்ய முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த செயல்முறை பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில், சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
2025-இல், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு முன்னெடுத்த பணிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தலித், மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், தேர்தல் ஆணையம் பாஜகவின் செல்வாக்கின் கீழ் செயல்பட்டு, தலித்துகள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இது, இந்த சமூகங்களின் வாக்குரிமையை மறைமுகமாக பறிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு செம்ம ட்ரீட்... அகவிலைப் படியை உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல்...!
இதனிடையே, பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா என கேள்வி எழுப்பினார். குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள் என்றும்
பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். பட்டியல் வகுப்பினர் உள்ளிட்டவர்களின் வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்... இன்று வெளியாகிறது பீகார் வாக்காளர் இறுதிப் பட்டியல்...!