தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பிரஜைகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களுக்கு ஈடுபட வைத்த முக்கிய நபர் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் மூத்த தளபதி ஜாகி-உர்-ரஹ்மான் லக்வியுடன் நேரடி தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசு தேடும் பயங்கரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹபீஸ் சயீத் ('சாச்சா ஜி') மற்றும் லக்வி ('தாயா ஜி') ஆகியோருடன் தொடர்புடைய ஷபீர் அகமது லோன் என்ற வங்கதேச இந்திய வம்சாவளி நபர், பயங்கரவாத அமைப்புகளில் பயிற்சி பெற்றவர்களை மூளைச்சலவை செய்து இந்தியாவுக்குள் அனுப்பி வருகிறார்.
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு மற்றும் 2008 மும்பை தாக்குதல்களுடனும் இவர் தொடர்பு கொண்டவர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து அந்தமான் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! கடலில் தத்தளித்த பயணிகள்!!
டெல்லியில் சமீபத்தில் பயங்கரவாத ஆதரவு போஸ்டர்கள் ஒட்டிய இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கும் தமிழகம்-மேற்கு வங்கத்தில் கைதான வங்கதேசத்தினருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ஷபீர் அகமது லோன் வங்கதேசத்தினரை லஷ்கர் அமைப்பில் சேர்த்து, ஐ.எஸ்.ஐ. நிதி உதவியுடன் இந்தியாவுக்குள் ஸ்லீப்பர் செல்களாக அமைத்து வருகிறார். வாட்ஸாப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் கட்டளைகளை அனுப்பி வருகிறார்.

மேற்கு வங்கத்தில் கைதான ஒருவர் லோனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தாக்குதலுக்கு முன் தமிழகத்தில் கைதான ஆறு பேரை கொல்கட்டாவுக்கு வரவழைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள ஷபீர் அகமது லோனை டில்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றை 1,000 முதல் 5,000 ரூபாய்க்கு வாங்கி வைத்திருந்தனர்.
வடமாநிலத்தவர் போல காட்டிக்கொண்டு தனிமையில் செயல்பட்டதால் நீண்ட காலம் சிக்காமல் இருந்துள்ளனர். இவர்களைப் போல பலர் இருக்கலாம் என்பதால், பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களை தமிழக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் லஷ்கர் அமைப்பு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஸ்லீப்பர் செல்களை அமைத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க: ரூ.1.45 கோடியில் வள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவு..!! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின் ..!!