இந்தியாவின் நிதி களத்தில், கடன் வாங்கும் பழக்கம் புதிதல்ல. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சியூட்டுகிறது. உலகளாவிய நுகர்வோர் நிதி சேவை நிறுவனமான ஹோம் கிரெடிட் இந்தியாவின் 2024 ஆண்டு ஆய்வறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோக மின்பொருட்களுக்கான கடன் 2020இல் 5%ஆக இருந்தது, 2024இல் 21%ஆக உயர்ந்துள்ளது. இதன் முக்கிய காரணம் டிஜிட்டல் ஆப்கள். இந்த ஆய்வில், 65% கடன் வாங்குபவர்கள் செயலி வழியிலான வங்கி சேவைகளை நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்குவதற்கு வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். ஆவணங்கள் சரிபார்ப்பு, கடன் மதிப்பீடு, உத்தரவாதங்கள் என பல அடுக்குகள். ஆனால், ஆப்களில் வெறும் சில கிளிக். உங்கள் ஆதார், PAN மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்தால், நிமிடங்களுக்குள் கடன் உங்கள் கணக்கில் வருகிறது. வங்கிகளில் கடன் வாங்குவது கடினம் என்பதால், ஆப்கள் உடனடி உதவியாகத் திகழ்கின்றன.

80% இந்தியர்களிடம் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. Paytm, PhonePe, Google Pay போன்ற ஆப்களில் கடன் விருப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கி கடனுக்கு தேவையான குறைந்தபட்ச வருமானம், வேலை அனுபவம் போன்ற தடைகள் இங்கு குறைவு.
இதையும் படிங்க: “குருமூர்த்தி ஒரு அரசியல் வியாபாரி”... என்னை பற்றி விமர்சிக்க தகுதியில்லை - சி.வி.சண்முகம் அட்டாக்...!
இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்களின் வங்கி சேவை செயலிகளை விட கடன் வழங்கும் APP-கள் அதிகம் நிறுவப்படுவதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது. வங்கி சேவை செயலிகளில் வாடிக்கையாளர் சேவை, பயனர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குலசை திருவிழா... வேடம் போட போறீங்களா? கோவில் நிர்வாகம் கொடுத்த முக்கிய அறிவுரைகள்...!